அவிநாசி, ஏப்.5-
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி பகுதியில் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ ராசாபோட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திமுக நிர்வாகிகள் பொன்னுச்சாமி, ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ், வேலுச்சாமி, ரமேஷ், சிபிஐ நாசர், கனகராஜ், மதிமுக ராஜா, காங்கிரஸ் சாய் கண்ணன், ஸ்ரீதர், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.