tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பங்கள் விநியோகம்

உடுமலை, செப்.19- உடுமலை அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக் கப்பட்டன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் சார்பில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும்  கேந்திரிய வித்யாலயா பள்ளி இவ்வாண்டு பொள்ளாச்சி நாடா ளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட  உடுமலையில் தொடங்கப் படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தற்காலிகமாக உடுமலை ராஜேந் திர சாலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் செயல்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இதைய டுத்து உடுமலையில் நடப்பு  கல்வி ஆண்டு முதல் வகுப்புகளை தொடங்கும் வகையில், வியாழக் கிழமை முதல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், தற்காலிக மாக நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று  முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார் கள். பின்னர் மற்ற வகுப்புகள் விரி வுபடுத்தப்படும். மாணவர் சேர்க்கை பள்ளி விதிமுறையின் படி சேர்க்கப்படும். முதல்கட்ட மாக பெற்றோர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இம்மாத இறுதி வரை முறையாக விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.  முன்னதாக, வியாழனன்று விண்ணப்ப டோக்கன் பெற பெற்றோர்கள் அதிக அளவில் வந்ததால் பள்ளி வளாகம் பரபரப் பாக காணப்பட்டது.