tamilnadu

img

ஊதிய பாக்கியை உடனே வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

திருப்பூர், ஆக. 25 – பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்குத் தர வேண்டிய சம்பள பாக் கியை உடனடியாக வழங்க வலியு றுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

ஆட்குறைப்பு என்ற பெயரில் கடந்த 20 வருடங்களாக பணிபுரி யும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் களை வேலை நீக்கம் செய்யக் கூடாது. பிஎப், இஎஸ்ஐ போன்றவற் றைப் பிடித்தம் செய்து ஊழியர்க ளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக் குக் கடந்த 12 மாதங்களாக வழங் கப்படாமல் உள்ள நிலுவை ஊதி யத்தை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆக. 25,26 ஆகிய தேதிகளில் பிஎஸ் என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையொட்டி, திருப்பூரில் தமிழ் நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாயன்று தொடங்கினர்.

திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கக் கிளைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் ஒப்பந் தத் தொழிலாளர்களின் கோரிக் கைக்கு ஆதரவு தெரிவித்து பிஎஸ் என்எல் ஊழியர்களும் உண்ணாவிர தத்தில் பங்கேற்றனர்.  

இதில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் முத்துக் குமார், ரமேஷ் மற்றும் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கக் கிளைச் செய லாளர்கள் குமரவேல், தங்கராஜ், இளஞ்செல்வன், வின்சென்ட், மாவட்ட நிர்வாகிகள் ராமசாமி, விஸ் வநாதன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் போராட் டத்தின் நோக்கத்தை விளக்கி உரை யாற்றினர். இதைத்தொடர்ந்து இரண் டாவது நாளாக புதன்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொள்ளப்படும் என்று பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்

. தருமபுரி

இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்கள் தருமபுரி பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ் கரன் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பருதி வேல், மாவட்டச் செயலாளர் எம்.செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதி களில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜேக்கப் மோரீஸ், பொருளாளர் பிரின்ஸ், மாவட்ட உதவி செயலாளர் ரவிக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், கிளைச் செயலாளர்கள் கே.ஆர்.ரவி (குன் னூர்), அருள்செல்வன்(கூடலூர்), எம்.சுபீர் (கோத்தகிரி), ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கென்னடி, கிளைத் தலைவர் கிருஷ்ணகுமார், லியோ, கிளைச் செயலாளர்கள் மனோஜ் (குன்னூர்), சிவகுமார் (கூடலூர்) உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டங்களில் திர ளானோர் கலந்து கொண்டனர்.