திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாவட்ட சிஐடியு 12ஆவது மாநாடு ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது. இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு மாநாட்டை முன்னிட்டு, இதற்கு முந்தைய மாநாடு நடை பெற்ற காங்கேயம் நகரில் இருந்து சனியன்று மாநாட்டில் ஏற்றப்படும் செங்கொடி கொண்டு வரப்பட்டது. மாவட்ட நிர்வாகி கணேசன் செங் கொடியை வழங்க சிஐடியு போக்கு வரத்து சங்க மண்டலச் செயலாளர் செல்லதுரை தலைமையிலான குழு வினர் அதைப் பெற்றுக் கொண்டு ஊத்துக்குளிக்கு கொண்டு வந் தனர். அதேபோல் எம்.எஸ்.உஸ்மான் நினைவுக் கொடிமரத்தை சனி யன்று உடுமலைப்பேட்டை கண்ணாடிப்புத்தூரில் இருந்து பயணக்குழுவினர் ஊத்துக் குளிக்குக் கொண்டு வந்தனர். திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் எடுத்துக் கொடுத்த தியாகிகள் நினைவு ஜோதியை சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் தலைமையிலான குழுவினர் எடுத்து வந்தனர். இக் குழுவினர் இருசக்கர வாகனங் களில் அணிவகுத்து வந்தபோது வாவிபாளையம், குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடி, கொடிமரம், தியாகிகள் நினைவு ஜோதி பயணக்குழுவினர் ஊத்துக்குளி வந்தடைந்த நிலையில், சென்னிமலை சாலைப் பிரிவில் இருந்து, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் மற்றும் பல்வேறு கிளைச் சங்க நிர்வாகிகள், மாநாட்டுப் பிரதி நிதிகள் ஊர்வலமாக பயணக் குழுவினருடன் வந்தனர். எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே தியாகிகள் நினைவு ஜோதியை ஏ.கே.பத்மநாபன் பெற்றுக் கொண்டார். மாநாட்டு அரங்கத்துக்கு முன்பாக ஊத்துக் குளி டவுன் பேருந்து நிறுத்தம் அருகில் மாநாட்டுக் கொடி மரம் நடப்பட்டது. இதில் செங்கொடியை சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி எழுச்சி முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, சுரேஷ் நினைவரங்கில் மாநாடு தொடங்கியது. அஞ்சலி தீர்மானத்தை எம்.பாக்கியம் முன் மொழிந்தார். இம்மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.குமார் வரவேற்றார். அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மாநாட்டு வேலையறிக்கை மற்றும் ஸ்தாபன அறிக்கையை முன்வைத்தார். பொருளாளர் டி.குமார் வரவு செலவு அறிக்கையை முன்வைத் தார். இதைத் தொடர்ந்து முதல் நாள் மாநாட்டு நிகழ்வுகள் நிறைவ டைந்தன. ஞாயிறன்று பிரதிநிதிகள் விவாதம், தொகுப்புரை, தீர்மானங் கள் நிறைவேற்றப்படுகின்றன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெறுகிறது. மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஏ.கே.பத்ம நாபன், கே.ஆர்.கணேசன், எம்.சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.