tamilnadu

img

பட்டப்பகல் வழிப்பறி போல் பஜாஜ் பைனான்ஸ் வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் பணம் எடுத்து அராஜகம்

திருப்பூர், ஜூன் 2 - திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் பெற்றிருந்த பல ரது வங்கிக் கணக்கில் இருந்து தன் னிச்சையாக பணத்தை எடுத்துக் கொண்டது பட்டப்பகல் வழிப்பறி போல் இருக்கிறது என்று வாடிக்கை யாளர்கள் மனக்குமுறலை வெளிப் படுத்தினர். திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகரில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவல கத்தை திங்களன்று நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற் றுகையிட்டனர். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பஜாஜ் பைனான்ஸ்  நிறுவ னம் எவ்வித நெறிமுறையும் இல்லா மல் தன்னிச்சையாக பணத்தை எடுத் துள்ளது என்று புகார் கூறினர்.  

கொரோனா ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக மக்களுக்கு வேலை யில்லாமல், வருமானமும் இல்லா மல் திண்டாடி வருகின்றனர். இந் நிலையில், மத்திய அரசு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம் பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்ப ளத்தை வழங்க வேண்டும் என்று அறிவுரை அளித்தது. அத்துடன் வங் கிக் கடன் பெற்றவர்களிடம் மாதாந் திர கடன், வட்டி தவணையான இஎம்ஐ பிடித்தம் செய்யக் கூடாது என்றும் வங்கிகளுக்கு கூறியிருப்ப தாக மத்திய அரசு தெரிவித்திருந் தது. எனினும் பல தனியார் வங்கிகள் மத்திய அரசு சொன்னதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள் ளவில்லை. வழக்கம் போல் தனிநபர் மற்றும் வாகனக் கடன் பெற்றவர் களின் வங்கிக் கணக்கில் இருந்து கடன் பணத்தை சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் பிடித்தம் செய்து கொண் டனர்.

இது பற்றி வாடிக்கையாளர் கள் புகார் தெரிவித்தால், முன்கூட் டியே வங்கிக்கு இஎம்ஐ பிடித்தம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டால் மட்டுமே பிடித்தம் செய்ய மாட்டோம் என்று நூதன விளக்கம் கொடுத்தனர். இது ஒருபுறம் இருக்க பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக வாடிக்கை யாளர்களின் பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துக் கொண்டிருப்பது தற்போது அம்பலத்துக்கு வந்துள் ளது. திருப்பூர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் இந்த அடாவடி செய லால் பாதிக்கப்பட்ட வாடிக்கையா ளர் ஒருவர் தனது வங்கிக் கணக்கு அறிக்கையைக் காட்டினார். அதில் மே 7ஆம் தேதி ஒரே நாளில் பாஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அடுத்த டுத்து இரு முறை தலா ரூ.295 வீதம் பணத்தை எடுத்துக் கொண்டுள் ளது.

இதேபோல் மற்றொரு வாடிக் கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்கள் தன்னிச்சையாக ரூ.295, ரூ.200 என பணத்தைப் பிடித்துக் கொண்டுள்ளனர். வேறொரு வாடிக்கையாளர் கூறும்போது, வங்கிக் கடன் தொகை செலுத்த பிரதிமாதம் 2ஆம் தேதி இறுதிக் கெடு எனக் குறிப்பிட் டிருந்ததால் அதற்கு முதல் நாள் 1 ஆம் தேதியே பணத்தைச் செலுத்தி விட்டேன். ஆனால் அதன் பிறகும் 2 ஆம் தேதி கூடுதல் பணத்தைப் பிடித் தம் செய்திருந்தனர், இது பற்றி வங்கி அலுவலர்களிடம் கேட்டால், ஏற்கெனவே செலுத்திய தொகையை அசல் கடனில் கழித்துக் கொள்வோம் என்றனர். ஆனால் அபராதத் தொகையாக மறுநாள் பிடித்தம் செய்ததற்கு பதிலளிக்க வில்லை என்றார். இதுபோல் ஒவ்வொரு வாடிக் கையாளரும் தங்கள் வங்கிக் கணக்கு அறிக்கையுடன் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவல கத்தை முற்றுகையிட்டுக் கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு பஜாஜ் ஊழியர்கள் பொறுப்புடன் பதில ளிக்கவில்லை. பிடித்தம் செய்த தொகையை திரும்பத் தர முடியாது என்று கூறியுள்ளனர்.

பஜாஜ் பைனான்ஸ் ஊழியர்கள் ரௌடிகளைப் போல் நடந்து கொள் வதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக் கையாளர்களையே மிரட்டுவது போல் நடந்து கொள்வதாகவும் சிலர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த குமார் நகர் பகுதி யில் ஏராளமானோர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்று கையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. காவல் துறையினர் அங்கே வந்து பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர். எனினும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் புகார்கள் குறித்து  அவர்கள் எவ்விதத்திலும் தலை யிடவில்லை. வங்கியில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துவிட்டு நம்மை மொட்டையடித்து அனுப்பி விடு வார்கள், வங்கிக் கணக்கிலேயே பணம் போடாமல் விட வேண்டியது தான் என வாடிக்கையாளர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினா லும் அவர்களுக்கு தீர்வு காண பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமோ, அரசு அதிகாரிகளோ யாரும் முன்வர வில்லை.