அவிநாசி, மே 24-உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகத்தினர், ஊராட்சி செயலர்கள், அனைத்துஅரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,தண்டுக்காரம் பாளையம் ஊராட்சியில் ஏற்கனவே உள்ள வாக்குச் சாவடிகளில் போதிய அளவு இட வசதி, மின்சார வசதிஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பழங்கரை ஊராட்சி மற்றும் கருவலூர் ஊராட்சியில் 3, 6 ஆவது வார்டில் போதிய அளவு வாக்குசாவடிகள் இல்லை. எனவே அங்கு கூடுதலாக வாக்குசாவடிகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும்,இந்தக் கூட்டம் நடைபெறுவது பற்றி முறையாக யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அனைவருக்கும் முன்கூட்டியே முறையாக தகவல் தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பதிலளித்த ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன், கூட்டங்கள் நடைபெறுவது தொடர்பாக இனிமேல் முன்கூட்டியே அனைவருக்கும் முறையாக தகவல் தரப்படும் என்றார். மேலும், முன்பு 175 வாக்குச்சாவடிகள் இருந்ததை சமீபத்தில் நடந்த தேர்தலில் 24 வாக்குச்சாவடிகள் கூடுதலாக்கி தற்போது 191 வாக்குச்சாவடிகளாக அமைத்துஉள்ளோம். இருப்பினும் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேவைக்கு ஏற்ப கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் வாக்குச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.