tamilnadu

img

அவிநாசி: குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகை

அவிநாசி, ஜன. 26- அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்ச னையை தீர்க்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டனர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் முதலாவது திட்டக் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு மாற்றாக இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் ஊராட்சி பகுதியில் பொது குழாய் அமைத்து  தர வேண்டும். மேலும் இந்திரா நகர், 3ஆவது வார்டு பகுதியில் சாலை வசதி அமைக்க வேண்டும் என ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி மன்ற தலை வரை முற்றுகையிட்டு ஞாயிறன்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மாரி முத்து இருகரம் கூப்பி விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக கூறிய பிறகு கலைந்து சென்றனர்.
போத்தம்பாளையம் ஊராட்சி
இதேபோல், ஒரு லட்சம் லிட் டர் கொள்ளளவுள்ள மேல்நிலை  தொட்டியிருந்தும் ஆற்று குடிநீர் இல்லாமல் போத்தம்பாளையம் ஊராட்சி மக்கள் தவித்து வருகின் றனர். எனவே உடனடியாக ஆற்று  குடிநீர் வேண்டியும், தரமற்ற நிலை யிலிருக்கும் சாலை, சாக்கடை வசதியை சீரமைக்க வேண்டி கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் மனு அளித்தனர். புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் தெருவிளக்கு இல் லாத பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க கோரியும், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைக்கக் கோரியும், சீமை கருவேலமரங் களை ஊராட்சி முழுவதும் அகற்ற கோரியும் மனு அளிக்கப்பட்டது.
வடுகபாளையம் 
வடுகபாளையம் ஊராட்சியில் முறையான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, சாலை வசதி, பொதுக்கழிப்பிடம் கோரியும், கட்டி முடிக்கப்பட்ட பசுமை வீடு,  தொகுப்பு வீடு மற்றும் தனிநபர் கழிப்பிடத்திற்கு வழங்கப்படா மல் இருக்கும் தொகையை உட னடியாக வழங்க வேண்டும் என வும் மனுக்கள் அளிக்கப்பட்டன.
கணியம்பூண்டி 
கனியம்பூண்டி ஊராட்சி பகுதியில் கௌசிகா நதியில் கோழி குப்பை, பனியன் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஆறு மாசடைகிறது. இதனால் விவசாயி களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உடனடியாக கௌவுசிகா நதியை பாதுகாக்க வேண்டுமென பொது மக்கள் மனு அளித்தனர் .
புதுப்பாளையம் 
புதுப்பாளையம் ஊராட்சியில் 9 மற்றும் 11 ஆவது வார்டு பகுதி யில் அடிப்படைப் பிரச்சனை களை தீர்க்கக் கோரி அப்பகுதி மக்கள் கிராம சபையில் மனு அளித்தனர்.