tamilnadu

img

திருப்பூர் அரசு மருத்துவமனை, சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு நேரில் ஆய்வு

திருப்பூர், ஆக. 29 – திருப்பூரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழ் நாடு சட்டப்பேரவை பொது நிறு வனங்கள் குழு நேரில் ஆய்வு செய்தது. திருப்பூர் சட்டப்பேரவை பொது  நிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை தலைமையில் குழு  உறுப்பினர்கள் மகேஷ் பொய்யா மொழி, ஈஸ்வரன், கோ.வி.செழி யன், சண்முகம் மற்றும் பாண்டியன் உள்ளிட்டோர் வியாழனன்று திருப்பூருக்கு வருகை தந்தனர். திருப்பூரில் சுகாதாரம், குடிநீர் வடிகால் வாரியம், மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் உட்பட பொது நிறுவனங்களின் நிலை குறித்தும், அதில் நடைபெற்று வரும் வளர்ச் சிப் பணிகள் குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்தனர். குறிப்பாக திருப் பூர் அரசு தலைமை மருத்துவமனை, சந்திராபுரம் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மற்றும் வீர பாண்டி பொது சுத்திகரிப்பு நிலை யம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
எம்ஆர்ஐ ஸ்கேன்
திருப்பூர் அரசு தலைமை மருத் துவமனையில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.6 கோடியே 2 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி ஏற் படுத்தப்பட உள்ளது. அதற்கான தனி அறை, மின் மாற்றி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர். எம்ஆர்ஐ ஸ்கேன் மாலை 5 மணி வரை இயக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் விபத்துகளோ அல்லது அவசரமாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தால் பாதிக்கப்பட்டோர் எங்கு செல் வார்கள் என குழுவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு மருத்துவ மனை நிர்வாகத்தரப்பு அளித்த பதில் திருப்தி அளிக்காததால், தொடர்ச்சியாக இயங்க வேண் டும். அப்போது தான் அனைவ ருக்கும் பயன்படும் என தெரி விக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்ப துதான் அரசின் திட்டமாக உள் ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 27 ஏக்கர் காலி நிலம் உள்ளது. ஆகவே அதில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்க வேண்டும் என மருத்துவமனை தரப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் குண சேகரனும் வலியுறுத்தினர். இது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரி வித்தனர்.
புதிய தொட்டியில் நீர்க்கசிவு
திருப்பூர் சந்திராபுரத்தில் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியைக் குழுவினர் பார்வை யிட்டனர். திருப்பூர் மாநகரின் விரிவாக்கப் பகுதிகளில் சீரான பகிர்மானக் குழாய்கள் இல்லை என்பதால் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செப். 30ஆம் தேதி பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அப்போது குழுவினர் ஆண்டுக் குப் பாரமரிப்பு செலவு எவ்வளவு ஆகும் என கேள்வி எழுப்பினர். அதற்கு ரூ. 1கோடியே 20 லட்சம் ஆகும் என்றனர். இதற்கான நிதியை எப்படி எடுப்பீர்கள் என மாநகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பார மரிப்புச் செலவைக் காரணங் காட்டி, குடிநீர் வரியை மாநக ராட்சி நிர்வாகம் மக்கள் மீது உயர்த்தக்கூடாது என்றனர். மேலும் புதிய குடிநீர் தொட்டியில் நீர் கசிந்து வெளியே வருவதை பார்த்த ஆய்வுக்குழுவினர் அதிர்ச்சி யடைந்தனர். அப்போது அங்கிருந்த குடிநீர் அலுவலர்கள், தொட்டிக்கு பூச்சு முடிந்து 4 நாட்கள் ஆகிறது. தற்போது நீர் கசியவில்லை. அது சரி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.