திருப்பூர், பிப். 13 – திருப்பூரில் நடைபெற்ற சிறு பான்மையினர் உரிமைகள் தின விழாவில் 145 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமை கள் தின விழா நடைபெற்றது. இதில் ஒருவருக்கு ரூ.10ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகையும், 52 பேருக்கு ரூ.5 லட்சத்து 20ஆயி ரம் மதிப்பில் விதவை உதவித் தொகையும் மற்றும் 92 பயனாளிக ளுக்கு ரூ.4 லட்சத்து 60ஆயிரம் மதிப்பில் முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான உத வித்தொகையும் வழங்கப்பட்டன. இதன்மூலம் மொத்தம் 145 பேருக்கு ரூ.9 லட்சத்து 9ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் வழங்கினார். இதில், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.சாகுல்ஹமீது, துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுவர்தினி, அரசு அலுவலர்கள் மற்றும் முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்பினர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.