திருப்பூர், டிச. 28 - திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறையில் அரசுப் பணியில் இருப்போரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று தெளி வாக குறிப்பிடப்பட்டிருந்தும், அந்த விதிமுறைக்கு முரணாக மாவட்ட நிர் வாகம் ஏற்பாடுகளைச் செய்திருப்பது தேவையற்ற குழப்பத்தையும், சந்தே கத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட் டத் தேர்தல் வெள்ளியன்று முடிவ டைந்தது. இரண்டாவது கட்டத் தேர் தல் வரும் 30ஆம் தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து 13 மையங்களில் வாக்கு எண்ணும் பணி வரும் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ் வொரு மையத்திலும் வாக்கு எண்ணு கைக்கான மேற்பார்வையாளர் மற் றும் உதவியாளர்களை தேர்தல் நடத் தும் அலுவலர்கள் நியமிக்க வேண் டும். திருப்பூர் மாவட்டத்தில் இந்த பணிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தன்னிச்சை யாக நியமித்துள்ளனர். அத்துடன் அவர்களை கட்டாயப்படுத்தி வரவ ழைப்பதாகவும் தனியார் பள்ளி ஆசி ரியர்கள் புகார் கூறினர். இதற்காக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையிலும் தேர்தல் விதிமுறையை முறைகேடா கக் குறிப்பிட்டு 28ஆம் தேதி (சனி) பயிற்சிக்கு வர வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புத்த கத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு அரசு அலுவலர்களை நியமிக்க வேண் டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. குறிப்பாக இந்த விதிமுறை புத்தகம் பக்கம் 96-இல், “...அரசுப் பணியில் உதவியாளர் நிலைக்குக் கீழ் இல்லாத பணியாளர்களை வாக்கு எண்ணுகை மேற்பார்வை யாளர்களாகவும், இளநிலை உதவி யாளர் நிலைக்குக்கீழ் இல்லாத பணி யாளர்களை வாக்கு எண்ணுகை உதவியாளர்களாகவும் நியமிக்க வேண்டும். அத்துடன் வாக்குப்பெட்டி களை வாக்கு எண்ணுகை மேசைக ளுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து திருப்பிக் கொண்டு வருவதற்கு உதவிபுரிய போதிய எண்ணிக்கை யிலான அலுவலக உதவியாளர்கள் அல்லது பதிவுரு எழுத்தர்களை நிய மிக்க வேண்டும்...” என்று மிகத் தெளி வாக அரசுப் பணியாளர்களைத் தான் நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட் டுள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுடன், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள் ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். குறிப்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு, ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவி களுக்குப் போட்டியிடும் உள்ளூர் மட்ட வேட்பாளர்கள் கட்சி சின்னம் அல்லாத சுயேட்சை சின்னத்தில் போட்டியிடக் கூடியவர்கள் என்ற நிலையில் போட்டி நெருக்கமானதாக, பதற்றம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அப்போது வாக்கு எண் ணும் பணியில் நன்கு பயிற்சி பெற்ற, அனுபவம் மிக்கவர்கள் ஈடுபடும் போதுதான் பிழையின்றியும், முறை கேடு இல்லாமலும் வாக்கு எண்ணிக் கையை சரியாக நடத்திச் செல்ல முடியும். ஏற்கெனவே தமிழகத்தில் 8 ஆண் டுகள் கழித்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கே இதில் உரிய பயிற்சி தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில் தனியார் பள்ளி ஆசிரி யர்களை நியமிப்பது பல்வேறு குளறு படிகளுக்கு வழிவகுப்பதாக அமையும் என்று தேர்தல் தொடர்பான அனு பவம் மிக்க அரசு அதிகாரிகள் கூறு கின்றனர். மேலும் அரசுப் பணியாளர்கள் எனும்போது அவர்களை நேரடியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசு நிர் வாகத்தின் வசம் உள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களை அப்படி நேரடி யாகக் கட்டுப்படுத்த முடியாது. உள்ளூர் மட்டத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வளைந்து கொடுத்து பணி செய்தால் வாக்கு எண்ணிக்கை பணியில் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் ஏற்படக்கூடும். எனவே நேர்மையான வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் விதிமுறை யைச் சரியாக கடைப்பிடிக்க வேண் டும். அத்துடன் தனியார் பள்ளி ஆசிரி யர்களும் வாக்கு எண்ணிக்கை பதற் றத்தை ஏற்படுத்தும் பணியாக அச்சப் படுகின்றனர். போதிய பயிற்சியும் இல்லாமல், நெருக்கடியான சூழலுக் குள் தள்ளி தங்களை கட்டாயப்படுத் துவதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஏற்கெனவே இது போன்ற தேர் தல் பணிகளில் தனியார் ஆசிரியர் களை நியமிக்கக் கூடாது என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதாக வும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அதே சமயம் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக விதிமுறையை மீறி தங்களைத் தொடர்பு கொள்ளாமல், தங்கள் நிர் வாகத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமாரைத் தொடர்பு கொண்டபோது தெளிவாக பதில் கூறவில்லை. திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வை யாளர் இரா.கஜலட்சுமியைத் தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் பதில் கூறினார். மாநி லத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பதில் கூறுவார் என்று மட்டும் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யாரும் தொடர்புக்கு வரவில்லை. (ந.நி)