திருப்பூர், ஜூன் 24 – உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண் டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள் ளது. தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ச.கருப்பையா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பி டப்பட்டுள்ளதாவது, உடுமலை சங்கர் ஆணவப் படு கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இப்படியொரு தீர்ப்பு வருவதற்குக் காரணம் காவல்துறை இவ்வழக்கில் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததும், அரசுத் தரப்பு இவ்வழக்கினை முறையாக நடத்தாததுமே ஆகும். இந்நிலையில், ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் ஒன்றினை அரசு இயற்றிட வேண்டும் என்கிற கோரிக்கையை தலித் விடுதலை இயக்கம் அரசிற்கு முன் வைக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஆணவக் கொலைகளை தடுப் பதற்கும், ஆணவக் கொலைகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீட்டு நிவாரணங்கள் வழங்குவதற்கும்
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிப்ப தற்கும் அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என அர சுக்கு பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை தமிழக அரசு உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும். உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தமி ழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண் டும், எனக் கூறப்பட்டுள்ளது.