திருப்பூர், பிப். 29 – திருப்பூர் சீர்மிகு நகரம் திட் டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன் னுரிமை கொடுத்து நிறைவேற்று மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுந்தரம், ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பினர் பி.பாலன் உள்ளிட்டோர் சனி யன்று திருப்பூர் மாநகராட்சி அலு வலகத்தில் அதிகாரிகளைச் சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் சீர்மிகு நகரம் திட்டத்தில் குடிநீர், வீட்டு வசதி, குப்பைகளற்ற, மாசற்ற திடக்கழிவு மேலாண்மை, தேவையான மருத்துவ வசதி, பொது போக்குவரத்து, நெருக்கடி யற்ற சாலை வசதி, உத்தரவாத மான மின் விநியோகம், நகரின் பாதுகாப்பு, நவீன தகவல் தொழில் நுட்பம், ஆரோக்கியம், கல்வி உள் ளிட்ட நகர மக்களுக்கு கண்ணிய மான வாழ்க்கைத் தரத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சியையும் ஏற்படுத்து வதே இத்திட்டத்தின் நோக்கம். இந்நகரிலுள்ள வீடில்லா ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு அடுக் குமாடி குடியிருப்புகள் கட்டி வீடு கள் ஒதுக்கப்பட வேண்டும். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரமான முறை யில் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும், நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் பறக்கும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். நகரில் நடைபாதைக ளில் மாற்றுத் திறனாளிகள், முதி யோர், குழந்தைகள் தங்கு தடை யின்றி செல்லும் வகையில் அமைக் கப்பட வேண்டும். நகரில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் மருத்துவர், செவி லியர் உள்பட அனைத்து விதமான வசதிகளுடன் செயல்படும் வகை யில் மாற்றி அமைக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இன்றி குப் பைகளை முறையாகப் பிரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண் மைத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 60 வார்டுகளிலும் மக் கும், மக்காத குப்பைகளுக்கான தொட்டிகள் அமைக்க வேண்டும், வீடுகளுக்கு சிறு அளவில் குப்பை சேகரிப்பு பக்கெட்டுகள் வழங்க வேண்டும். மாநகராட்சிக்குள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் சுகா தார மேம்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கி குழந்தைகள் ஆரோக்கி யத்தை உறுதி செய்ய வேண்டும், விரிவடைந்த பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுத்திக ரிக்கப்பட்ட குடிநீர் வணிக நோக் கம் இல்லாமல் வழங்க வேண்டும், சாலையோரங்களில் பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் பகுதிகளில் தற்போதுள்ள ஏழை, எளிய சாதா ரண சிறு வியாபாரிகளுக்கு தற் போது சீர்மிகு திட்டத்தில் கட்டப் படும் வணிக வளாகங்களில் தரைத் தளத்தில் முன்னுரிமைக் கொடுத்து கடைகள் வழங்கப்பட வேண்டும். மண்டல வாரியாக பொறுத்த மான மக்கள் சந்திக்கும் மையமான இடங்களில் சாலையோர வியா பாரிகளுக்கு கடைகள் கட்டி ஒதுக்க வேண்டும், நகரின் காற்று மாசு பட்டு வரும் நிலையில் மாநகராட்சி யால் நடைபெறும் பழைய கட்டிட இடிப்பு மற்றும் புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் கடும் காற்று மாசை உருவாக்கியுள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் வகை யில் தடுப்பு வலைகள் அமைத்திட வேண்டும், புதிய பேருந்து நிலை யத்தில் கட்டப்பட்ட வணிக கடை களில் பெரும்பகுதி காலியாகவே உள்ள நிலையில் புதிய கடைகள் வேண்டியதில்லை, பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட வேண் டும், அவிநாசி சாலையில் உள்ள ஆம்னி பேருந்துகளை நிறுத்த உரிய ஆம்னி பேருந்து நிலையம் தனியாக அமைத்திட வேண்டும். நகரின் மையப் பகுதியான புதிய 46ஆவது வார்டு விஜிவி கார்டன் மற்றும் மணியகாரம் பாளையம் இடைப்பட்ட பகுதி யில் உள்ள காலி இடத்தினை வகைப்படுத்தி புதிய உள்ளரங் கத்துடன் கூடிய உலகத்தரத் திலான விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும், அனைத்து முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வீதிகளில் உள்ள மின் கம்பங்களில் எரியும் வகையில் தரமான மின் விளக்கு களை அமைக்க வேண்டும், ரிசர்வ் சைட்டுகளில் சிறுவர் பூங்கா, நடை பயிற்சி மைதானம், உடற்பயிற்சி நிலையம், சமுதாயக் கூடங்கள் அமைக்க வேண்டும், நூலகங்கள் தரம் உயர்த்தி முறையாக பராம ரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆலோசனை கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயனுக்கும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயனுக்கும் வழங்கப்பட்டுள் ளன.