tamilnadu

img

தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருக

சேலம், ஜூன் 12- தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மனையுடன் கூடிய பசுமை வீடு கள் கட்டித் தரவேண்டும் என வலியுறுத்தி பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் ஆண் டுப் பேரவையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டன. தமிழ்நாடு பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆண்டு பேரவை மேச்சேரியில் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார். இப்பேரவையில், நலவாரிய பணப் பயன்களை உடனுக்குடன் வழங்கி அதை இரட்டிப்பாக்கிட வேண்டும். தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மனை யுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக எஸ்.அன்பழகன், பொதுச் செயலாளராக எஸ். சண்முகம், பொருளாளராக பி.சசிகலா, துணைத் தலை வர்களாக எஸ்.பி.சுப்பிரமணியன், பி.ரங்கநாதன், சி.ராமநாதன், எஸ்.எம். தங்கராஜ், எஸ்.ராஜரத்தினம், துணைச் செயலாளர்களாக பி.முருகன், ஆர்.ரவிக் குமார், கே.வெங்கடேசன், பி.பழனிச்சாமி, இலக்கியவதியன் உள்ளிட்ட புதிய நிர் வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.