அவிநாசி, அக். 8- சேவூர் பகுதியில் அறிவிக்கப் படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். அவிநாசி அருகே சேவூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த செப்.30ஆம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டது. இதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநி யோகம் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை பகல் 2 மணி முதல், இரவு 7 மணி வரை திடீரென அறிவிக்கப்படாமல் மின் தடை செய்யப்பட்டது. இதேபோல் சனிக்கிழமையும் பிற்பகலில் சுமார் 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் சேவூர்,ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப் புதூர், பந்தம்பாளையம், சூரி பாளையம், பாப்பங்குளம், வாலி யூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைதாமரைகுளம், சாவக் கட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகமின்றி பொதுமக்கள், தொழிற்துறை யினர் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ஞாயிறன்று மீண்டும் பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை மின் விநி யோகம் நிறுத்தப்பட்டது. இத னால் சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்துறையினர், வணிக நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் பெரும் பாதிப்பிற்குள் ளாகினர். குறிப்பாக ஊராட்சி பகுதிக ளில், மின் மோட்டார் இயக்க முடியாமல் குடிநீர் ஏற்றம் மற்றும் விநியோகம் தடைபட்டது. இத னால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகினர். மேலும் சேவூரில் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கான தலைமை மருத்துவமனையாக இயங்கும் சேவூர் அரசு மருத்துவ மனையில் ஏற்பட்ட மின்தடை யால் நோயாளிகள் பெரும் பாதிப் பிற்குள்ளாகினர். விடுமுறை யிலிருந்த பள்ளி குழந்தைகளும், கடுமையாக உழைக்கக்கூடிய தொழிலாளர்களும் வீட்டில் இருந் தனர். ஆனால் மின் தடையால் ஓய்வு எடுக்க மிகவும் சிரமத்திற் குள்ளாகினர். விசிறிகளை இயக்க மின்சாரம் இல்லாததால் வீட்டின் வெளியில் கையில் விசிறியுடன் திண்ணையில் அமர்ந்து பொழுதைக் கழித்தனர். ஒரு சிலர் அருகில் உள்ள மர நிழலில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தொழிற்துறை யினர் கூறுகையில், பின்ன லாடை, விசைத்தறிக் கூடங்கள், இயந்திரப் பணிமனைகள் நிறைந்த பகுதியாக சேவூர் உள் ளது. பலரும் சேவூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணி யாற்றி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படு வதால் தொழிலாளருக்கு வேலை வழங்க முடியவில்லை. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்த ஆர்டர்களை செய்து கொடுக்க முடியாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இந்நிலையில், பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட பவர் ஹவுஸ் அருகில் தனியார் நூற் பாலைக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்குவதற்காக, கடந்த சில நாள்களாக தொடர்ந்து மதியம் முதல் இரவு வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இத னால், எங்களைப் போன்ற சிறு தொழில் துறையினர் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்ற னர். இதற்கு மின்வாரியத்தினர் மாற்று ஏற்பாடு செய்திருந்தால், இது போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். இனி வரும் காலங்களில், மாற்று ஏற்பாடு செய்து மின் விநியோகம் செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து மின் வாரியத்தி னரிடம் கேட்ட போது, மின் இணைப்பு மாற்றியமைக்கும் பணி நடைபெற்றதால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்து விட்டது, இனி சீராக மின் விநியோகம் செய்யப்படும் என்றனர். (ந.நி)