tamilnadu

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி, அக். 17- அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை தரச்சான்று குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய சான்று பெறுவது குறித்த என்ஏசிசி ஆலோசனைக்கூட்டம் அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வணிக வியல் துறை உதவி பேராசிரியர் எம்.கோப்பண்ண சாமி கூறுகையில், என்ஏசிசி எனப்படும் தேசிய தர நிர்ணயம்  பெறுவதால் மனிதவள மேம்பாட்டுத்  துறையின் மூலம் கல்லூரிக்கு  நிதியினை பெற ஏது வாக இருக்கும். இனிவரும் காலங்களில் தேசியத் தகுதிகள் பெற பின்பற்ற வேண்டிய  பணிகள்  கோப்பு கள் மற்றும் விதிமுறைகளையும்  எடுத்துரைத்தார். கூட்டத்தில் முதல்வர் (பொ) சி.குலசேகரன், வணிக வியல் துறைத்தலைவர் முனைவர்.டேவிட் சௌந்தர் ராஜன், முனைவர்.செ.பாலமுருகன், வணிகவியல்,  (சர்வதேச வணிகம்), வேதியியல், பொருளியல், கணி தம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணினி துறை பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.