திருப்பூர், ஜன. 22 – 17ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா வரவேற்புக்குழு அலுவலகம் திங்களன்று கே.ஆர்.சி. சிட்டி சென் டரில் திறந்து வைக்கப்பட்டது. பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடத்த உள்ளனர். புத்தகத் திருவிழா நடை பெறும் சிட்டி சென்டரில் வரவேற்புக் குழு அலுவலகத் திறப்பு விழா திங்க ளன்று நடைபெற்றது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவர் மோகன் கார்த்திக் இந்த அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். இதில் சங்க நிர் வாகிகள் அரிமா எம்.ஜீவானந்தம், யுனிவர்சல் பழனிச்சாமி, எம்பரர் பொன்னுசாமி, பிரிண்டிங் குமார சாமி, வி.டி.சுப்பிரமணியம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்புக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்து வதற்கு இதுவரை நடைபெற்றிருக்கும் பணிகள் குறித்து செயலாளர் ஆர்.ஈஸ்வரன், துணைத் தலைவர் அ.நிசார் அகமது ஆகியோர் எடுத்துரைத்தனர். தலைவர் மோகன் கார்த்திக் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக உரையாற்றினார். நிறைவாக வரவேற்புக்குழு துணைத் தலைவர் பர்வீன் சௌகத் அலி நன்றி கூறினார்.