திருப்பூர், ஜன. 30 - திருப்பூரின் பண்பாட்டுத் திருவிழாவாக அடையாளம் பெற்றுள்ள 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா-2020 வியாழனன்று உற்சாகமாகத் தொடங்கியது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளா கத்தில் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ சு.குணசேகரன் இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் தலைமை ஏற்றார். ஆயத்தஆடை ஏற்றுமதி மேம் பாட்டுக் கழகத் தலைவர் ஏ.சக்திவேல், திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைத் தலை வர் மைக்கோ வேலுச்சாமி, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூர் ஏற்று மதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினர். முதல் புத்தக விற்ப னையை சைமா தலைவர் ஏ.சி. ஈஸ்வரன் தொடங்கி வைக்க, டாக்டர் நல்லி குப்பு சாமி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். முன்னதாக நிமிர்வு கலைக்குழுவினர் நூறு பறைகளில் இசை முழக் கம் செய்து பார்வையாளர் களை ஈர்த்தனர். தொடக்க நாள் நிகழ்வில் வரவேற்புக் குழுத் தலைவர் மோகன் கே.கார்த்திக், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், நிர்வாகிகள் அரிமா எம்.ஜீவானந்தம், எம்பரர் வி.பொன் னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மொத்தம் 102 அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. முன்னணி புத்தகப் பதிப்பகங் கள் 42 அரங்குகளிலும், புத்தக விற்பனையா ளர்கள் 60 அரங்குகளிலும் புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.மொத்தம் 11 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறு கிறது. வாசகர்கள், பார்வையாளர்கள் வாகன நிறுத்தம், சிற்றுண்டி உள்ளிட்ட பிற வசதிகளுக்காக இம்முறை கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வரவேற்புக்குழுவினர் தெரிவித்த னர்.