tamilnadu

யூனியன் வார்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு விவரம்

திருநெல்வேலி, ஜூன் 6-நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம்இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. அதில் 2 வார்டுகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், ஒரு வார்டு தாழ்த்தப்பட்ட பொது பிரிவுக்கும், 7 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 7 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.பாப்பான்குளம், பொட்டல்புதூர் பகுதி 9-வது வார்டு, மேலஆம்பூர், கீழ ஆம்பூர் பகுதி 15-வது வார்டுஆகியவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், வீராசமுத்திரம், மந்தியூர், கோவிந்தபேரி பகுதி 13-வது வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து பகுதி 1-வதுவார்டு, கடையம் பெரும்பத்தில் ஒரு வார்டு, வெங்காடம்பட்டி பகுதியை உள்ளடக்கிய 2-வது வார்டு, சேர்வைகாரன்பட்டி பகுதி 6-வது வார்டு, மடத்தூர், ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்துகளில் ஒருசில வார்டுகள் மற்றும் தெற்குமடத்தூர் பகுதியை உள்ளடக்கிய 7-வதுவார்டு, கடையம் பகுதி 11-வதுவார்டு, திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம் பகுதி 12-வது வார்டு, கோவிந்தபேரி, தர்மபுரமடம், சிவசைலம் பகுதி14-வது வார்டு ஆகிய 7 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.கடையநல்லூர் யூனியனில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் பெண்களுக்கும், ஒரு வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும், 4 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.களக்காடு யூனியனில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் சீவலப்பேரி, கோவிலம்மாள்புரம் பகுதி 5-வது வார்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், சிங்கிகுளம், கீழகாடுவெட்டி பகுதி 2-வது வார்டு,மலையடிபுதூர், தளவாய்புரம் பகுதி 7-வதுவார்டு, செங்காலகுறிச்சி, கோவிலம்மாள்புரம் பகுதி 8-வது வார்டு, புலியூர்குறிச்சி பகுதி 9-வது வார்டு ஆகிய 4 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடுசெய்யப்பட்டு உள்ளது.மேலும் இடையன்குளம், பத்மநேரி, தேவநல்லூர் பகுதி1-வது வார்டு, தேவநல்லூர், கீழகருவேலங்குளம் பகுதி 3-வது வார்டு, கள்ளிகுளம், படலையார்குளம், கீழகாடுவெட்டி பகுதி4-வது வார்டு, சூரங்குடி, கடம்போடு வாழ்வு, வடுகச்சிமதில் பகுதி 6-வதுவார்டு ஆகிய 4 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.