tamilnadu

டிக்டாக்கில் வன்முறையை தூண்டும் வீடியோ பதிவு

திருநெல்வேலி, ஜூன் 11- டிக்டாக்கில் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர்களான முவின் குமார் (19) முகேஷ் கண்ணன் (20) ஆகி யோர் தங்களது மொபைலில் உள்ள டிக்டாக் செயலியில் ஒரு குறிப்பிட்ட சமு தாயத்தை பற்றி அவதூறாக பேசி மற் றும் வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர்.  இதுகுறித்து மானூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து முவின்குமார், முகேஷ் கண்ணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.