tamilnadu

img

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி

திருநெல்வேலி:

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த ஞாயிறன்று தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இலங்கையையொட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாலும், அவர்களால் தமிழகத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் பகுதி வரை குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பாதுகாப்பு எல்லை உள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சுற்று வட்டாரங்களில் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.