tamilnadu

img

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 138 ஆக அதிகரிப்பு, 400 பேர் படுகாயம்

இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. 400 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 6 இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் கேட்டறிந்தார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.