tamilnadu

img

இலங்கையின் கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 40 பேர் பலியாகி உள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் இன்று காலை 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம் ஒன்றிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் கேட்டறிந்தார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்