tamilnadu

img

வெளி மாநிலத்தவர் நியமனத்தை மறுபரிசீலனை செய்க! மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூன் 12- வெளிமாநில தொழிலாளர்களின்  நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் பாளை யங்கோட்டை மகாராஜ நகர் மின்வாரிய அலுவலகம் முன்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; கஜா புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்ட வர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்ட த்துக்கு, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலை வர் எம்.பீர்முஹம்மதுஷா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் துவக்கி வைத்துப் பேசினார். கோட்டச் செயலாளர்கள் டி.சுப்பிரமணியன், டி.பிரம்ம நாகலிங்கம், ஏ.இசக்கி ராஜன், எம்.ராமச்சந்திரன், வி.பச்சையப்பன், டி.தளபதி, கடையநல்லூர்கோட்டத் தலைவர் வி.மருது பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட துணைத் தலைவர்கள் டி.கந்தசாமி, எஸ்.பூலு டையார் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.   எஸ்.வண்ணமுத்து நிறை வுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.