tamilnadu

img

ரேசன்கடையில் 21 பொருட்கள் வழங்குக: சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

   திருநெல்வேலி, ஜூலை 18- ரேசன்கடையில் 21 அத்தியா வசியப்பொருட்கள் இலவசமாக வழங்கக்கோரி  நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றி யத்தில் ஒன்பது இடங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஊரடங்கு காலத்தில் டிசம்பர் மாதம் வரையிலும்  ரேசன்கார்டு  இருப்பவர்கள், இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும்  மாதம் தோறும்  21 வகையான அத்தியா வசிய பொருட்களை விலை யில்லாமல் வழங்க வேண்டும். பாகுபாடு இல்லாமல் மாதம்தோ றும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியத்தில்   9 இடங்களில் ரேசன்கடை முன் பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கற்ப கம், நிர்வாகிகள் கனகா,சந்தனமாரி,முத்தம்மாள்,லோகநாயகி, பாப்பா, ராமர்கனி,செய்யது பாத்திமா,செலவசுந்தரி உள்பட    180 பெண்கள் கலந்து கொண்டனர்.