tamilnadu

நெல்லை காவல் நிலையம் மூடல்

திருநெல்வேலி, ஜூலை 19- நெல்லை மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதி கரித்து கொண்டு செல்கிறது. நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் தொற்று அதிகமாக இருந்ததால், அந்த தெரு மூடப் பட்டது. சுகாதார பணியை தீவிரப்படுத்தி னாலும், கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக் காக சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பெண் உதவி ஆ்வாளர் உள்பட 8 போலீஸ்காரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.  போலீஸ் குடியிருக்கும் பகுதியில் சுகா தார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக் கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு உள்ளது. இதற்கிடையே நெல்லை டவுன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணிகளில் ஈடு பட்டனர்.