tamilnadu

பந்தநல்லூர் காவல் நிலையம் மூடல்

கும்பகோணம், ஜூன் 20-  தஞ்சை மாவட்டம் அணைக்கரை சோதனைச்சாவடியில் பணியாற்றக்கூடிய அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் முத ற்கட்டமாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் 23  வயது காவலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து அந்த காவலர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பந்த நல்லூர் காவல்நிலையம் சீல் வைக்கப்பட்டு அங்கு கிருமிநா சினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கா வலர் குடியிருப்பு அருகே உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.