tamilnadu

மதுரை – நாகர்கோவில் இருவழிப்பாதை திட்ட 3-ம் கட்ட பணிகள் 2022 மார்ச்சுக்குள் நிறைவடையும்... ரயில்வே அதிகாரி தகவல்

திருநெல்வேலி:
மதுரை- நாகர்கோவில் ரயில்வே இருவழிப்பாதை திட்டத்தின் 3-ம் கட்ட பணிகள் வரும்2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்நிறைவடையும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ரயில்வே அதிகாரி பதில் அளித்துள்ளார்.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள ரயில்பாதை தமிழகத்தின் மிகமுக்கிய ரயில்வழித்தடம் ஆகும். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலிஆகிய 11 மாவட்டங்கள் வழியாகஇந்த வழித்தடம் கன்னியாகுமரியை வந்தடைகிறது.இதை மையமாக வைத்தே மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் பிரிந்து செல்கின்றன. தென்மாவட்டங்களை சார்ந்த பயணிகள்இந்த தடத்தில் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் மதுரை – கன்னியாகுமரி ஒரு வழி பாதையாகஇருப்பதால் புதிய ரயில்கள் இயக்கமுடியாதநிலை இருந்து வருகிறது.இதைத் தொடர்ந்து நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாக,மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக இருவழிப் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ரூ. 1,182.31 கோடி, நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்டமதிப்பீடு ரூ. 1,003.94 கோடி. இந்த திட்டத்தை ரயில்வேதுறையின் கீழ் உள்ள பொதுதுறை நிறுவனமான ஆர்விஎன்எல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இத் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் கொரோனா தொற்று காலத்திலும் வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தை மையமாக வைத்து இருவழிப்பாதை பணிகள் நடைபெற்று வந்தது.வாஞ்சிமணியாச்சி முதல் திருநெல்வேலிமார்க்கமாக கங்கைகொண்டான் வரையிலும், வாஞ்சிமணியாச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக கடம்பூர் வரையிலும், வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடி மார்க்கம் தட்டபாறை வரை இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்று45 கி.மீ தூரத்துக்கு சோதனை ஓட்டம்நடைபெற்று பயணிகள் ரயில்கள்இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.2-ம் கட்டமாக கங்கைகொண்டான் முதல் திருநெல்வேலி வரை 14 கி.மீ தூரமும், கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை 23 கி.மீ தூரமும், தட்டபாறை முதல் மீளாவட்டன்7கி.மீ தூரமும் , துலுக்கப்பட்டி முதல் திருமங்கலம் வரையில் 41 கி.மீ தூரமும் வேகமாக பணிகள் நடந்து வருகிறது.

இந்த ஆண்டிற்குள் இந்த பணிகள் நிறைவுபெற்று சோதனை ஓட்டம் நிறைவுபெற்றுவிடும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் இத் திட்டத்தில்3-ம் கட்ட பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான இரா. பாண்டிய ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குரயில் விகாஸ் நிகாம் நிறுவன அதிகாரி கைலாஷ் குமார் அளித்துள்ள பதில்:3-ம் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து துலுக்கப்பட்டி வரை 41 கிமீமற்றும் கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை 65 கிமீ பணிகள் மார்ச் 2021 க்குள் முடிவடையும்.மதுரை சந்திப்பில் இருந்து திருமங்கலம் வரை 17 கிமீ மற்றும் துலுக்கப்பட்டி முதல் கோவில்பட்டி வரை32 கிமீ பணிகள் மார்ச் 2022 க்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.இதன்மூலம் இத் திட்டப்பணிகள் வரும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது ரயில்கள் இயங்காமல் இருப்பதால் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.