திருநெல்வேலி
தமிழக தென் மாவட்டங்களில் மதுரையை போலவே திருநெல்வேலி மாவட்டத்திலும் கொரோனா பரவல் ஜெட் வேகத்தில் உள்ளது. அம்மாவட்டத்தின் மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் (மதிய நிலவரப்படி) 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 826 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலியின் புறநகர் பகுதியான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி , களக்காடு, மானூர், பாளையங்கோட்டை தாலுகா ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.