திருநெல்வேலி, ஜூலை 7- நெல்லை தச்சநல்லூரையடுத்த ராமையன்பட்டி குப்பை கிடங்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் மாநகராட்சியால் தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் உருவாகி ராமையன்பட்டி மற்றும் தச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மூச்சி திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. வாகனத்தில் செல்வோரும் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி குப்பை கிடங்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி இடைக்கமிட்டி உறுப்பினர் ஜெ.மோகன், கம்மாளன் குளம் கிளை செயலா ளர் எஸ்.முருகன், வி.தொ.ச செயலாளர் எல்.ராஜ், விச மாவட்ட குழு உறுப்பினர் டி.செல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.