tamilnadu

img

முன்னாள் மேயர் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது

நெல்லை:
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவரை சிபிசிஐடி போலீசார் புதனன்று கைது செய்தனர்.நெல்லை மாநகராட்சி யின் முதல் பெண் மேயர்உமா மகேஸ்வரி (62). அவரது கணவர் முருகசங்கரன் (71). கடந்த ஜூலை 23 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மாரி என்ற பணிப்பெண்ணும் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 3 தனிப்படை போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களது விசாரணையில் சீனியம்மாள் மகன்கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் புதனன்று கைது செய்தனர்.