tamilnadu

திசையன்விளையில் இருந்து சென்னைக்கு இ-பாஸ் இல்லாமல் வேனில் சென்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது

திருநெல்வேலி, ஜூன் 7- திசையன்விளையில் இருந்து சென்னைக்கு இ-பாஸ் இல்லாமல் வேனில் சென்ற பெண்கள் உள்பட 6  பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க நாடு  முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமி ழக மாவட்டங்களை 8 மண்டலங்க ளாக பிரித்து அந்தந்த மண்ட லத்திற்குள் வாகனங்களில் செல்லும்  பொதுமக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் மண்டலம் விட்டு மண்ட லம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டது. இதன்படி நெல்லை மண்ட லத்தில் உள்ள நெல்லை, தூத்துக் குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குள் தடையின்றி சென்று வந்தனர். இந்நிலையில் நெல்லை மாவட் டம் திசையன்விளையில் இருந்து சென்னைக்கு டெம்போ வேனில் பெண்கள் உள்பட 6 பேர் இ-பாஸ் இல்லாமல் செல்லமுயன்றனர். இதையடுத்து சென்னை மதுரவா யலை சேர்ந்த தாமோதரன் (வயது 45), மகாதேவன்குளத்தை சேர்ந்த முத்து ராஜ் (25), வேல்முருகன் மனைவி விஜயகுமாரி, தலைவன்விளையை சேர்ந்த முத்துராஜ் (21), பிச்சைமணி மகள் முத்து சூரியா (18), முத்து கிருஷ்ணாபுரம் காளிதாஸ் மனைவி பஞ்சவர்ணம் (54) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.