tamilnadu

img

‘அணுக்கழிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஜனநாயக விரோதமானது’

திருநெல்வேலி:
கூடங்குளம் அணுக்கழிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என நெல்லையில் சுப.உதயகுமார் கூறினார்.இதுகுறித்து சிபிஎம் நெல்லை மாவட்டக் குழு அலுவலகத்தில் சுப.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  29 ஆம் தேதி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இருந்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாடிமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம், துண்டு பிரசுரங்களை கொடுத்தவர்களை  காவல்துறை மிரட்டி பறித்து  கொண்டு போய்விட்டது.

சண்டே கார்டியன் என்ற பிரிட்டன் பத்திரிக்கையில் கூடங்குளம்  அணுமின் நிலையத்தில் உள்ள சுவர்களின் அழுத்தத்தை தீர்மானிக்கின்ற சென்சார் கடந்த 2 வருடமாக வேலை செய்யவில்லை  என கூறப்பட்டுள்ளது.இது அணு உலைக்கு மிக ஆபத்தானது. 49 முறை மின் உற்பத்தியை நிறுத்தி  மீண்டும்திறப்பது நல்லதல்ல. இது ஜப்பான் புகுஷிமா போல் ஆகிவிடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.
29ஆம் தேதி போராட்டம் எங்களுக்குமட்டும் அனுமதி தராதது அராஜகத்துகுரி யது. தமிழிசை  அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக பேசுகிறார். அதே பிஜேபி கர்நாடக கோலார் தங்கவயலில் அணுகழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிஜேபி நிலையும் சரியானது அல்ல என்றார். பேட்டியின்போது  சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகுரு, எஸ். டி.பி.ஐமாவட்ட தலைவர் கரீம், ஹயாத், சிபி(எம்.எல்) ரமேஷ், தமிழக மக்கள் ஜனநாயககட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.