திருநெல்வேலி, ஆக. 20- பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்த்துப் போரிட்ட ஒண்டி வீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டி வீரனின் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒண்டிவீரன் சிலைக்கு சி.பி.எம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மாலை அணிவித்தார்,இதில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால்,மாவட்ட செய லாளர் க.ஸ்ரீராம் ,சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் பா.வரகுணன், வாலிபர் சங்க கருணா உட்பட பலர் கலந்து கொண்டனர். அதே போல் சி.ஐ.டி.யு ஊரக உள்ளாட்சி துறை சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் நிர்வாகிகளு டன் வந்து மாலை அணிவித்தார், அதே போல் சி.ஐ.டி.யு சார்பில் மாவட்ட துணை தலைவர் எம்.சுடலைராஜ், சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பு திட்ட செயலாளர் எஸ்.வண்ணமுத்து, ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஆர்.முருகன்,காளிமுத்து,பன்னீர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.