tamilnadu

img

செங்கோட்டையில் சிபிஎம் நிவாரண பொருட்கள் வழங்கல்

திருநெல்வேலி,  மே 24- செங்கோட்டை பிரானூர் பார்டர் வாய்க்கால் பாலம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. வட்டாரக் குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். திமுக இலக்கிய அணி நிர்வாகி புரோஸ்கான், குமார்(எ)இசக்கி, கோபி பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து சிபிஎம் வட்டாரச் செயலாளர் வேலுமயில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். வட்டாரக்குழு உறுப்பினர் பரமசிவன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தலைவர் நாராயணன், சாமித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.