திருநெல்வேலி, மே 14- 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலை என மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நெல்லை மற் றும் தென்காசி மாவட்டத்தில் சிஐ டியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. நெல்லை வண்ணார்பேட்டை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஆர்.மோகன் தலைமை வகித் தார். சிஐடியு அகில இந்திய செய லாளர் ஆர்.கருமலையான் பேசி னார். மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் சுடலைராஜ், ஜோதி, ஆர்.முரு கன், சிபிஎம் பாளை தாலுகா செய லாளர் வரகுணன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். செங்கோட்டை பாம்பே ஸ்டோர்ஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் வன்னியபெருமாள் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முரு கன், சிபிஎம் தாலுகா செயலாளர் வேல்மயில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டாரத் தலைவர்கள் என்.லெனின்குமார், எம்.கிருஷ்ணன், எஸ்.மாரியப்பன், எம்.தானு மூர்த்தி, கே.கருப்பையா, எஸ்.நாகரத்தினம், பாலமுருகன், வி.தொ.ச தலைவர் முருகேசன் மற்றும் கட்டுமானம், போக்கு வரத்து தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பாசமுத்தி ரம் ஒன்றியச் செயலாளர் ரவீந்தி ரன், சுரேஷ்பாபு ஆகியோர் கண் டன உரையாற்றினர். ராதாபுரம், கடையநல்லூர் ஆகிய இடங்க ளிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கரன்கோவிலில் மட் டும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.