tamilnadu

img

சிப்பிபாறை பட்டாசு ஆலை விபத்து  படுகாயமடைந்தவர் பலி

திருநெல்வேலி
பாலசுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிப்பிபாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி அந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆண், பெண் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் பாலசுப்பிரமணியன்  பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பாலசுப்பிரமணியனுக்கு இவருக்கு மனைவியும், இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.