tamilnadu

சூரிய கூடார உலர்த்தி அமைக்க மானியம் பெறலாம்

தூத்துக்குடி, மே 31- தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை உலர்த்து வதற்கு சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டத்தில் மானியம் பெற்று பயனடைய லாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறி யுள்ளதாவது: வேளாண் விளைபொருட்களை உலர்த்துவதற்கு உதவும் சூரிய கூடார உலர்த்தியை விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அரசு மானியத்து டன் அமைக்கலாம். தூத்துக்குடி மாவட் டத்தில் 2020-21ம் ஆண்டில் 6 சூரிய கூடார உலர்த்திகள் அரசு மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மானியம் ரூ.19.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அறுவடை செய்த விவசாய விளை பொருள்களை மண் தரையிலோ, சாலை யிலோ காய வைத்தால் பொருளின் நிறம் மங்கியும், நிறம் மாறியும் பொருட்களின் தரம் குறைகிறது.

காய வைக்கும் பொருளுடன் அந்த இடத்திலுள்ள கல், மண் போன்ற தேவையற்ற பிற பொருட்களும் கலந்து மேலும் தரம் குறையும். சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களின் தரம் உயரும். சந்தை மதிப்பும் கூடும். சூரிய ஒளி கூடாரத்தில் கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை, நிலக்கடலை, மிளகாய் பழம், மக்காசோளம் போன்ற பொருட்களை காய வைக்கலாம். அமைப்பு செலவில் சிறு, குறு, ஆதி திராவிட, பெண் விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மற்ற விவசாயி களுக்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை மானி யம் வழங்கப்படும்.

எனவே, அரசு மானியத்துடன் சூரிய கூடார உலர்த்தியை அமைத்து பயன் பெற விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள், இது தொடர்பான விபரங்கள் பெறுவதற்கும் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கும் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, 27 எச், எட்டையபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில் பட்டி (கைபேசி எண்:9442049591) அலுவல கத்தையும், உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை,4/122 ஏ1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, ஆறு முகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி (கைபேசி எண்:9443694245) அலுவலகத்தை யும், உதவி செயற் பொறியாளர் வேளா ண்மைப் பொறியியல் துறை, 65/10சி முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச் செந்தூர் (கைபேசி எண்:9443157710) அலு வலகத்தையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.