tamilnadu

ஆசிரியர் சங்க தலைவர்களை அச்சுறுத்தும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட கோரிக்கை

தூத்துக்குடி, ஜுலை 7- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொது செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ்  காரணமாக தமிழ்நாட்டில் 16 3 2020 முதல் அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 2019- 20 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக அரசாணை எண் 54 வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் காலாண்டு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடுமாறு கூறப்பட்டது. அவ்வாறு கணக்கிடும்போது அரசுப் பள்ளி மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் மாற்றுத்திற னாளி மாணவர்கள் தனித்தேர்வர்கள் ஏற்படும் பாதிப்புகள் மதிப்பெண் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளை கல்வித்துறைக்கு தெரிவிக்கும் வகையிலும் அதற்கான மாற்று ஆலோசனைகளை யும் முன்வைத்து தமது சங்கத்தின் கருத்துகளை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திரன் ஊட கங்கள் வழியே வெளியிட்டார்.

மதிப்பெண்கள் வழங்கும் விவகாரத்தில் தனி யார் சுயநிதி பள்ளிகளில் செய்யும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி இந்த சிக்கலை தீர்ப்பதற்கு மேற் கொள்ள வேண்டிய ஆலோசனைகளை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்தார். தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையில் மீது  அக்கறை கொண்டு மாணவர்கள் நலன் கருதி ஆலோசனைகள் வழங்கிய ஆசிரியர் சங்கத் தலை வர்கள் மீது பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை என்பது ஜனநாயக நெறிமுறை களுக்கு மாறாக ஆசிரியர் சங்கத்தலைவர் சுற்று கின்ற நடவடிக்கையாகும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசின் மீது கருத்து தெரிவிப்பதற்கு கூட ஆசிரியர்க ளுக்கு உரிமை இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை கருதுவது அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தமிழ்நாட்டின் கல்வி நலன் கருதி வெளியிடும் கருத்துக்களை விமர் சனமாக நோக்காமல் ஆக்கபூர்வமான ஆலோசனை களை பள்ளிக்கல்வித்துறை கருத வேண்டும்.