தூத்துக்குடி, ஏப்.6-
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசினார். அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று மக்கள்99நாள் போராட்டம் அமைதியாக நடத்தினர்.100வது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கொடூரத்தாக்குதல் நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மட்டுமின்றி பலர் படுகாயம் அடைந்தனர்.இது பற்றி முகிலன்குறும்படம் தயாரித்து, சென்னையில் வெளியிட்டு சென்றவர், அதன்பின்பு காணவில்லை. அரசுக்கு எதிராக கருத்து கூறினால் இது தான் நிலை. அரசியல் அமைப்பு நமக்கு கொடுத்த உரிமைகளை பறிக்கும் அதிகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடிக்கு கிடையாது. அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து கல்லூரி மாணவி வளர்மதி துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த காரணத்திற்காக அவர் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. ஒருமாணவியை கண்டு பிரதமர் மோடிமற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம். மே17 இயக்கத்தைசேர்ந்த திருமுருகன் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காவல்துறையில் இன்று பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இங்கு கருத்துரிமைமறுக்கப்படுகிறது.உலகமே வியந்த தலைவர் மகாத்மா காந்தி. அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காரணம் மதச்ச்சார்பின்மைக் கொள்கைதான். அந்த வெறி பா.ஜ.கவிடம் இன்றும்உள்ளது.கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைகள் அமைக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ்.சொன்ன போது அதனை கண்டிக்கவோ, இல்லை அமைக்க முடியாது என்றோ பிரதமர் மோடி சொல்லவில்லை. மனுதர்ம ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர், அரசியல் சட்டத்தினை தூக்கி ஏறிகிறார்கள், அம்பேத்கார் இயற்றிய அரசியல் சட்டத்தினை ஏற்க மறுக்கின்றனர். அதை தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகார பாசிச ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஒரு போதும் பாசிச ஆட்சியைஏற்படுத்த முடியாது. அதை தடுப்பதற்கான தேர்தல் இது.ஒரு குரங்கிடம் சிக்கிய பூமாலை போன்று இன்று இந்தியாஉள்ளது. அதனால் தான் இந்தியாவை மீட்போம் என்கிறோம். ஏலம் முறையில் முதல்வராக வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஸ்டெர்லைட் ஆலைக்கும் பா.ஜ.க., அதிமுக விற்கும் என்ன உறவு? அதிமுக கூட்டணியின் 40 தொகுதிகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலை செலவு செய்கிறது. வேலைவாய்ப்பு கொடுப்பதாக தமிழிசை கூறுகிறார். பிரதமர் மாதிரி பொய் பேசுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தனிப்பட்ட நபர்கள் தாக்குதல் தான் அதிகரித்துள்ளது. 35ஆயிரம் போராட்டம் நடைபெற்றது என்று கூறும் முதல்வர் அதற்கு தீர்வு கண்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கல்லா கட்டுவதை தவிர வேறு எந்த தீர்வினையும் முதல்வர் காணவில்லை.
அதிமுகவை மிரட்டி 5 சீட்களைபா.ஜ.க பெற்றுள்ளது. சோதனை என்ற பெயரில் அதிமுகவை பணியை வைத்தது பா.ஜ.க. அதிமுகவை உடைத்ததும் இணைத்ததும் பா.ஜ.க தான். ஒரு அரசியல் கட்சியை 400 கோடி கொடுத்து விலைக்குவாங்கியுள்ளது. அதிமுக கூட்டணி கொள்கைக் கூட்டணியா? கொள்ளைக் கூட்டணி. கொலைகாரக் கூட்டணி.பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு செய்து ஒரு ஆண்டு சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீது தவறு இருந்தால் தூக்குதண்டனை கொடுக்கலாம், ஆனால்யாருக்காக மாணவிகளை தவறானவழிக்கு அழைத்தார் என்பதனை கண்டறிய வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே இந்த இரு ஆட்சிகளையும் அகற்றி விட்டு மோடியையும் பாடியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.