தூத்துக்குடி, ஜூன் 25- கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சில தினங்களுக்கு முன் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த மேலும் ஒரு கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ராஜாசிங் என்ற விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தான் இவரையும் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.