tamilnadu

மருத்துவமனையில் இருந்து வெளியே சுற்றும் கொரோனா நொயாளிகள்

தூத்துக்குடி, ஜூலை 12- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வெளியே வந்து பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள டீக்கடையில் டீ அருந்தி விட்டு சென்ற சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் தேநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. ஆரம் பத்தில் 25, 50 நோயாளிகள் என இருந்த தால் நோயாளிகளுக்கு நல்ல முறையில் உணவு வழங்கப்பட்டு வந்தன. தற்போது எண்ணிக்கை 400ஐ தொட்டதால் அரசு மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர் கூறுகையில், அரசு மருத்துவமனை யில் ஆரம்பத்தில் நோயாளிகளுக்கு தேவை யான உணவு மற்றும் தேநீர் உள்ளிட்டவை முறையாக வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், தற்போது சரிவர கவனிப்பதில்லை. காலை சாப்பாடு 10மணிக்கும், மதிய உணவு 3மணிக்கும், இரவு நேர சாப்பாடு 10மணிக் கும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வேளை யும் 2மணி நேர தாமதத்திற்கு பின்னரே உணவு வழங்கப்படுகிறது. மேலும், கொரோனா நோய்த்தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டவ‌ர்கள் தங்கியுள்ள பகுதி யிலே அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்படும் நபர்களையும் அனுமதிக்கப் படுகின்றனர். இதன் மூலம் நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். இந்நிலையில், அரசு மருத்துவமனை யில் கொரோனா நோய்த்தொற்று கிருமி யால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் சுமார் நான்கு பேர் நேற்று, காலையில் பாளை யங்கோட்டை ரோட்டில் உள்ள டீ கடைக்கு வந்து டீ அருந்தி கொண்டு இருந்துள்ளார் கள். அதே நேரத்தில் அரசு மருத்துவமனை பணியில் உள்ள ஊழியர் ஒருவரும் டீ  அருந்துவதற்காக அந்த‌ கடைக்கு வந்துள் ளார். கொரோனா வார்டில் இருந்து நீங்கள் எப்படி வெளியே வந்தீர்கள் எனக் கேட்டுள் ளார். அவர்கள் அதற்கு தகுந்த காரணத்தை கூறாமல் அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்று விட்டார்களாம்.

இந்த தகவல் அப் பகுதி முழுவதும் பரவியது. இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. போலீசார் உடனடியாக அப் பகுதி டீக்கடைகளுக்கு சென்று கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்து வமனையை விட்டு வெளியே வருவதாகவும் அதனால் டீக்கடைகள் முன்பு 1மீட்டர் முன் னதாகவே கயிறுகளை கட்டுமாறு அறி வுறுத்திச் சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.