தூத்துக்குடி, மே 20- தமிழக அரசின் குறைந்த பட்ச கூலியை வழங்கக் கோரி வெள்ளியன்று கால வரையற்ற உண்ணாவி ரதத்தில் ஈடுபட உள்ளதாக உப்புத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உப்புத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. சங்கரன் மற்றும் மாவட்டத் தலைவர் கே.பொன்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: உப்பளத் தொழிலா ளர்ளுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம் கடந்த 2020 ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடி வுற்ற நிலையில் மே 18 அன்று உப்பள நிர்வாகத்திற் கும், தொழிற்சங்க பிரதிநிதி களுக்குமிடையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், தமிழக அரசின் குறைந்தபட்ச சம்பள சட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு ரூ.440 வழங்கிட சிஐடியு சங்கம் சார்பில் வலி யுறுத்தி பேசப்பட்டது.
உப்பள நிர்வாகம் இதனை ஏற்றுக் கொள்ளா மல், ஆண்களுக்கு ரூ.405-ம், பெண்களுக்கு ரூ.395-ம் வழ ங்குவதாக தெரிவித்தது. மேற்படி ஒப்பந்தத்தில் சிஐ டியு சங்கம் கையெழுத்திட வில்லை. மேலும் மேற்படி சட்ட விரோத, தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசின் குறை ந்தபட்ச கூலி சட்டத்தின் படி ஆண், பெண் இருபால ருக்கும் ரூ.440 சம்பளம் வழங்க தமிழக அரசை யும் தொழிலாளர் துறையை யும் வலியுறுத்தி மே 22 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில் காலவரையற்ற உண்ணாவி ரதம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.