tamilnadu

ஆயுதப்படை போலீசார்  37 பேருக்கு கொரோனா  தொற்று

  தூத்துக்குடி, ஜூலை 28-  தூத்துக்குடியில் திங்களன்று ஒரே நாளில் ஆயுதப்படை போலீசார் 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில்.  பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில் ஞாயிறன்று ஆயுதப்படை போலீசாருக்கு 150 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில் 37 பேருக்கு திங்களன்று தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆயுதப்படை போலீசாரும் பாது காப்பு பணியில் இருந்தனர். இதனால் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. மேலும் அதே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் போலீசாருக்கு செவ்வாயன்று கொரோனா உறுதி யானது.