திருவில்லிபுத்துார்:
திருவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழாவில் தங்கத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னாரை எழுந்தருளச் செய்து பக்தர் களின்றி தேரோட்டம் நடத்திக்கொள் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.இந்தக் கோவில் விழா ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 24-ஆம் தேதி தேரோட்டம் நடத்த வேண்டும். ஊரடங்கால் விழா நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இதனிடையே கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பூரத் திருவிழாவை பக்தர்களின்றி கோவிலுக்குள் நடத்தவும், ரதவீதிகளில் இழுக்கபடும் திருத்தேருக்கு பதில் கோவில் உட்பிரகாரத்தில் தங்கத் தேர் இழுக்கவும், இதை இணையதளம் மூலம் ஒளிபரப்பி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி அரசிற்கு கடிதம் அனுப்பபட்டிருந்தது.இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஆடிப்பூரத்தை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால்,இணையதளம் மூலம் தரிசிக்கலாம் எனக் கூறியுள்ளது.