அரியலூர்:
அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி ஊராட்சியில் அரசு மதுபான கடை அமைக்கப்படவில்லை இதனால் பக்கத்து ஊருக்குச் சென்று அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து பெட்டிக் கடை, டீக்கடைகளில் வைத்து 24 மணி நேரமும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக கிராமத்தில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி மக்கள், சாத்தாம்பாடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரனை அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து பூட்டினர். தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர், கோரிக்கை குறித்துதகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில்மக்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி தலைவர் விடுவிக்கப்பட்டார்.