திருவில்லிபுத்தூர்:
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறைந்தது நான்கு மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.6000நேரடியாகப் பண உதவி வழங்க வேண்டும்.மத்திய அரசு, இந்த உதவியை, மாநில அரசுகள் மூலமாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அலை யன்ஸ் முயற்சியில், எம்.எஸ்.ஐ-தமிழ்நாடு, திருப்பூர் மக்கள் அமைப்பு, முகாம் கூலிமுறைக்கு எதிரானப் பிரச்சாரம், புலம்பெயர்தொழிலாளர் உரிமைக் கூட்டமைப்பு, குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரச்சாரம், சிறகுகள் விரிய, போன்றத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் கையெழுத்துப் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன.திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற்கான அறக்கட்டளை (டெஸ்ட்) நிறுவனத்தின் சார்பில் திருவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் சுமார் 85 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அவை டெஸ்ட்நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் த.வேல்மயில் தலைமையில் தமிழ்நாடு அலையன்ஸ் வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.