இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படி அனைத்து சமய நிறுவனங்களின் நிலங்களில் சாகுபடி செய்வோர், குடியிருப்போர், வணிகம் செய்வோருக்கு அந்த உடமைகளை சொந்தமாக்கிடவேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று பல்வேறு மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் மாநில அமைப்பாளர் சாமி நடராஜன் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்றோர்.