மன்னார்குடி;
மன்னார்குடி ஒன்றியம் ஏத்தகொடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பன்னீர்செல்வம் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன.
புதிதாய் கட்சியில் இணைந்த ஏத்தகொடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செந்துண்டு அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எம்.திரு
ஞானம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவரையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி.ரெகுபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.டி. கந்தசாமி, எஸ்.பொன்னுச்சாமி, காசிநாதன், கோவிந்தராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.முடிவில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.