tamilnadu

img

காங்கிரசிலிருந்து வெளியேறிய 25 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

பத்தனம்திட்டா:
பத்தனம்திட்டா மாவட்டம் கலஞ்சூர் பஞ்சாயத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன. அவர்களை சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.உதயபானு சிவப்பு மாலைகள் அணிவித்து வரவேற்றார்.மக்களுக்காக எதையும் செய்ய இயலாத அரசியல் இயக்கத்தில் தொடரவிரும்பவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதாக அக்கட்சியின் வட்டார தலைவர்களாக செயல்பட்டுவந்த சூரஜும், ஷபீக்கும் தெரிவித்தனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மட்டும் ஊழியர்களை அணுகுவதும், அதன்பிறகு கைவிடுவதையுமே காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.கொள்ளை நோய்க்கு எதிராக சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில் நோய் அதிகரித்து மனிதர்கள் இறந்து கிடப்பதைக் காண விரும்பும் காங்கிரசின் செயல்பாடு தங்களை மிகவும் பாதித்ததாக அக்கட்சி யிலிருந்து விலகிய ஊழியர்கள் தெரிவித்தனர்.