திருவண்ணாமலை,டிசம்பர்.03- நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்சல் புயல் காரணமாகத் திருவண்ணாமலையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வஉசி நகரில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் புதைந்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.